Sunday, March 16, 2008

ரஜினி திடீர் வருகை ; 'குசேலன்' குழு திகைப்பு

அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

பாம்குரோவ் ஓட்டலுக்கு ரஜினி வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டதாம். திடீரென்று அங்கே அவர் வர, அமளி துமளியாகிவிட்டது மொத்த ஓட்டலும். குசேலன் படத்தின் பாடல் கம்போசிங் அங்குதான் நடந்து கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்யூன்களை போட்டுக் கொண்டேயிருக்கிறார். அதில் பல மாற்றங்களை சொல்லி சொல்லி மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் பி.வாசு.

 

இந்த நிலையில்தான் ரஜினியிடமிருந்து எதார்த்தமாக போன் வர, கம்போசிங்கில் இருக்கேன் என்றாராம் வாசு. அடுத்த அரை மணி நேரத்தில் அறிவிக்காமலேயே வந்துவிட்டாராம் ரஜினி. பிறகுதான் நாம் மேலே சொன்ன அமளி துமளி.

ரஜினியின் இந்த வரவில் ஒரு விசேஷம் இருக்கிறது. பாம்குரோவ் ஓட்டலுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது அருணாச்சலா கெஸ்ட் ஹவுஸ். ரஜினிக்கு சொந்தமான இந்த கெஸ்ட் ஹவுசில்தான் பாபா படத்தின் டிஸ்கஷன் நடந்தது. அப்போது கூட, பாம்குரோவ் காபியை ருசி பார்க்க உள்ளே நுழைந்ததில்லை ரஜினி.

இப்போது வந்திருக்கிறார் என்றால் படத்தின் மேல் அவருக்குள்ள ஈடுபாடுதான் என்கிறது குசேலன் தரப்பு. பத்து நாட்கள்தான் அவர் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஊரெல்லாம் பேச்சிருக்க, ரஜினிக்காக ஒரு பாடல் காட்சி வச்சிருக்கோம். அந்த ஒரு பாடலை மட்டும் எட்டு நாள் எடுக்க போகிறோம் என்று புதிர் போடுகிறார் வாசு.