Source: http://thatstamil.oneindia.in/movies/specials/2008/02/26-ameer-slams-on-actors.html
எனக்கு சினிமா மீது தீராத காதல் இருக்கிறது. நல்ல படங்கள் தரும் வெறி இருக்கிறது. ஏதோ என்னால்தான் அப்படி நல்ல படங்கள் தரமுடியும் என்ற இறுமாப்பு அல்ல அது. தமிழ் சினிமாவை உலக அரங்குக்குக் கொண்டு செல்லும் பலரது கனவை நனவாக்கும் பொறுப்பு அது.
நடிகர்கள் குறித்த எனது பார்வையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது இந்த பருத்தி வீரன்தான். குரு பக்தி, நன்றி போன்றவற்றை இனி எதிர்பார்ப்பதே அபத்தம்.
ரஜினி சார், கமல் போன்ற நடிகர்கள் ஏன் மாமனிதர்களாகவும் உலகம் போற்றும் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் தங்கள் குரு மீது கொண்ட பக்தியும், என்றும் மாறாத நன்றி விசுவாசமும்தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.
நான் ரஜினி சாரை பலமுறை சந்தித்திருக்கிறேன். பாலச்சந்தரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ருமுறை கூட அவர் பெயரை உச்சரித்தில்லை. குருஜி என்றே கூறுவார். கமல் சாரும் அப்படித்தான். பாலச்சந்தரிடம் தான் வாங்கிய திட்டுக்களைக் கூட அப்படியே ப்பிப்பார் அந்த ப்பற்ற கலைஞன் இன்றைக்கும்.
பருத்திவீரன் படம் எடுத்த வகையில் இன்னும்கூட எனக்கு ரூ.1 கோடி வரை அதன் தயாரிப்பாளர் தர வேண்டியுள்ளது. படம் பெர்லின் விழா வரை போனால் என்ன பட்ட கடன் தானாகவே தள்ளுபடியாகிவிடுமா? என்றார் அமீர்.