ரோபோட் படத்திற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்தார் சுஜாதா. ரோபோட் என்ற பெயருக்கு மாற்றாக இயந்திரன் என்ற பெயரையும் அவர் ஷங்கருக்கு பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில் காலம் அவரை காவு கொண்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் ஷங்கரின் ரோபோட் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துக் கொடுத்தாராம் சுஜாதா. ஸ்கிரிப்ட்டை ஷங்கரிடம் கொடுத்த அவர் 'ஷங்கர் எனது வேலையை முடித்து விட்டேன். இனி எனக்கு டென்ஷன் இல்லை. இதுவே எனக்கு கடைசிப் படமாக இருந்தாலும் கவலை இல்லை' என்றாராம்.
அதேபோல ஸ்ரீபிரியாவின் தயாரிப்பில் சிம்ரன் நடிக்க ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவுள்ள 'சிம்ரன்' சின்னத்திரையின் முதல் கதையே சுஜாதாவின் கதைதான்.
அதுவே அவரது கடைசிப் படைப்பும் ஆகியுள்ளது. சுஜாதாவின் மறைவு தமிழ் படைப்புலகம் மாத்திரமல்ல கலையுலகத்துக்கும் பேரிழப்பு தான்.