''முதல் தடவையா ரஜினி தமிழர்களின் உணர்வுகளை மதிச்சு, வெளிப்படையாகக் குரல் கொடுத்ததா, பரவலாக பெரிய கருத்து இருக்கு. அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?''
''ரஜினி, எப்பவும் யாருக்கும் பயப்படுற ஆள் கிடையாது. ரஜினி என்னிக்கும் தன் கருத்துக்களை மத்தவங்களுக்காக ஒளிச்சும் மறைச்சும் சொல்ற ஆள் இல்லை. எனக்கு ரஜினி காவிரி பிரச்னையில் தனியா உண்ணாவிரதம் இருந்தது மட்டும்தான் பிடிக்கலை. தனிப்பட்ட முறையில், நான் பார்த்த நடிகர்களில் பொய் சொல்லாத நடிகன். தமிழ் நீரோட்டத்தில் ரஜினி கலந்துட்டார். இனிமேல் யாரும் அவரைத் தனிமைப்படுத்திப் பேசக் கூடாது. அவர் தமிழ்நாட்டுக்கு விசுவாசமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கார். இதுதான் நல்ல மாற்றம். இந்த உண்ணா விரதம் அவரை அசலா வெளியே கொண்டுவந்திருக்கு!''
''சத்யராஜின் பேச்சு எப்படி இருந்தது?''
''சத்யராஜ் ரொம்ப உணர்ச்சிபூர்வமாப் பேசினார். ஆனா, மனசுல நினைக்கிறதையெல்லாம் வெளியே கொட்டுறது தப்பு. சக கலைஞனை அதே மேடையில் வெச்சுக்கிட்டு, கொஞ்சம் ஒரு லைன் தாண்டிப் பேசிட்டாருங்கிறது வருத்தமா இருக்கு. ஆனா, பலவீனப்பட்டு இருந்த சமயத்தில் சத்யராஜ் ஓங்கிச் சத்தமிட்டாரே... அதைப் பாராட்டணும். மனுஷனுக்கு ஆவேசம் இல்லைன்னா, அவன் தமிழனே கிடையாதே!''
''என்னது, உங்க மகன் மனோஜ், இப்போ ஷங்கரிடம் உதவியாளராச் சேர்ந்திருக்காரே?''