Monday, April 14, 2008

ரஜினியின் அரசியலும்; நம் பத்திரிகைகளும்!

'ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தமிழக மக்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள்?' என்று உங்களுக்கு அடிக்கடி தோன்றுமே? ஏதோ அதற்கான என்னுடைய விடை.

'ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார்' என்று சொன்னால் மக்கள் நிச்சயம் சந்தோஷபடுவார்கள்.

ஆனால் 'வருவார்', 'வருகிறார்' என்று சொன்னால் சிரிப்பார்கள். விரக்தியாக. இது தான் உண்மை. நிதர்சனம்.

பொட்டில் அடிப்பது போல் சொல்வது என்றால் "ரஜினி அரசியலுக்கு வருவார் என்பது ஜோக். வந்துவிட்டால் அது ஒரு மாபெரும் செய்தி" அவ்வளவே!

சென்னையில் ஒரு பெட்டி கடையில் பார்த்த, கீழ் கண்ட, இன்றைய, தினமலர் போஸ்டர் ஐ கூர்ந்து கவனியுங்கள். ஏதாவது உங்களுக்கு தெரிகிறதா?

ஆயிரம் ஆயிரம் உரைகள் சொல்வதை ஒரு படம் எளிதில் சொல்லிவிடும். இந்த போஸ்டர் தற்செயலாக என் கண்ணில் பட்டது. இதற்க்கு கமெண்ட்ஸ் தேவையில்லை.


சரி, இந்த செய்திகளில் எந்தளவு உண்மை? என்று உங்களுக்கு தோன்றுமே? சரியா?

என்னை பொறுத்தவரை, தலைவரின் அரசியல் பிரவேசம் ஒரு பரபரப்பான திடீர் நிகழ்வாகத்தான் இருக்குமே தவிர, இப்படி திட்டமிட்ட செயலாக இருக்காது. பின் ஏன் பத்திரிகைகள் இப்படி எழுதுகின்றன? பரபரப்புக்காகவா?

ச்சே ச்சே... அப்படியெல்லாம் இல்லை. அவர் மேல் மக்களுக்கு இன்னும் இன்னும் வெறுப்பும் சலிப்பும் வரவேண்டும் என்பதற்காக. புரிகிறதா?

என்ன புரியவில்லையா?

மீண்டும் ஆரம்பத்திலிருந்து படியுங்கள்.