Thursday, November 22, 2007

Billa to release audio for Billa 2007

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பில்லா2007 படத்தின் இசை வெளியீடு
வெகு விரைவில் நடைபெற உள்ளது.

அதுவும் ஒரிஜினல் பில்லா நாயகன் ரஜினி தான் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின்
பில்லா ஆடியோவை வெளியிடப் போகிறார்.

எண்பதுகளில் ரஜினி நடித்து வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்த படம்
பில்லா. இந்தப் படம்தான் ரஜினியை தமிழகத்தின் அசைக்க முடியாத சூப்பர்
ஸ்டாராக்கியது.

அதுவரை, கமல்–ரஜினி என்று சொல்லப்பட்டு வந்த நிலை மாறி ரஜினி–கமல் என்று
நிரந்தரமாகிப் போனது பில்லாவுக்குப் பிறகுதான்.

அந்த அளவு பில்லாவில் ரஜினியின் ஸ்டைல், அசாத்திய வேகத்தில் கிறங்கிப்
போனார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ரீமேக் கலாச்சாரம் தொடங்கிய போது, பல இளம் நடிகர்களும்
முதலில் குறி வைத்தது பில்லாவுக்குதான். முதலில் சிம்புதான் இந்தப்
படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தார்.

ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் இந்தப் படத்தில் சிம்பு நடிப்பதை
ரஜினியே விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

பின்னர் அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் பில்லாவை ரீமேக் செய்யப் போகிறார்
என்று ரஜினியிடம் தெரிவிக்க, பில்லாவுக்குப் பொருத்தமான இன்றைய இளம்
நடிகர் அஜீத்தான் என்று கூறி வாழ்த்தினார் ரஜினி.

அது மட்டுமல்ல, படம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை படத்தின் வளர்ச்சி
குறித்த ஒவ்வொரு தகவலையும் கேட்டு பில்லா குழுவினரை உற்சாகப்படுத்தி
வருகிறார்.

இதை தனது பல பேட்டிகளில் கூறி நெகிழ்ந்திருக்கிறார் அஜீத்.

இப்போது பில்லா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சில
தினங்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதையும் முதலில்
ரஜினிக்குதான் போட்டுக் காட்டினார் அஜீத்.

அஜீத்தின் புதிய தோற்றம் மற்றும் மாறுபட்ட நடிப்பை மிகவும் பாராட்டிய
ரஜினி, தனது ஒரிஜினல் பில்லா பெற்ற வெற்றியை இந்தப் படமும் பெறும் என்று
தன்னோடு டிரைலர் பார்த்த ஏவி.எம். சரவணனை வைத்துக் கெண்டு அஜீத்திடம்
கூறினாராம்.

இப்போது படத்தின் இசை வெளியீட்டு விழா.

அதை எந்தத் தேதியில் நடத்தினால் ரஜினிக்கு வசதிப்படும் என்று அஜீத்
ரஜினியிடம் கேட்க,

அதற்கு ரஜினி, அட என்னப்பா இது என் படம்.. நீங்க ஒரு தேதியை ஃபிக்ஸ்
பண்ணிட்டு கூப்பிட்டா வந்திட்டுப் போறேன் என்றாராம்.

இதையடுத்து வரும் சனிக்கிழமைக்கு ஆடியோ ரிலீஸை வைத்துக் கொள்ள முடிவு
செய்தார்களாம்.

ரஜினி வெளியிடப் போகும் பில்லா படத்தின் ஆடியோ ரைட்ஸை லண்டனைச் சேர்ந்த
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் வாங்கியுள்ளது.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி படத்தை உலகமெங்கும் வெளியிடப்
போகிறார்கள் என்பது தெரியும்தானே!

http://thatstamil.oneindia.in/movies/heroes/2007/11/billa-releases-audio-billa-2007-211107.html