சென்னை, நவ. 5: இந்தியில் வெளியாக உள்ள Ôஹல்லா போல்Õ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பார் என்று கூறப்படுகிறது.
'சிவாஜி' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் பற்றி பல்வேறு செய்திகள் வருகின்றன. ஆனால் அவர், அடுத்தப்படம் பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள Ôஹல்லா போல்Õ படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிப்பார் என்கிறது மும்பை பட வட்டாரம். வடமாநிலத்தில் ஜெசிகா லால் என்ற பெண்ணின் கொலை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி உள்ளது. இதில் நடிகராகவே அஜய் தேவ்கன் நடித்திருக்கிறார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கி இருக்கிறார். வித்யாபாலன் கதாநாயகி. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதன் கதையை கேட்ட சாய்மீரா நிறுவனம், தமிழில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி, அவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியிடம் கேட்டபோது, Ôநானும் ரஜினியும் நண்பர்கள். அவர் இன்னும் படத்தை பார்க்கவில்லை. தமிழில் இப்படம் ரீமேக் செய்யப்படுமா என்பதுபற்றி தெரியாதுÕ என்றார். படத்தின் நிதி ஆலோசகர் சஞ்சய் பண்டாரி கூறும்போது, Ôசாய்மீரா நிறுவனம் இப்படத்தின் வியாபார பங்குதாரர்கள் ஆவர். அவர்களுக்கு கதை பிடித்திருக்கிறது. தமிழில் ரீமேக் செய்ய விரும்புகின்றனர். ரஜினியிடம் கால்ஷீட் பெறுவதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்Õ என்றார்.