Friday, November 2, 2007

Superstar and Illayaraja meet - Tamil Murasu News

படத்துக்கு இசையமைத்தாலும் சரி, அமைக்காவிட்டாலும் சரி, மாதத்தில் ஓரிருமுறை நேரில் சந்திப்பது இளையராஜா, ரஜினியின் வழக்கம். சில நாட்களுக்கு முன் திடீரென்று பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினி, இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டருக்குச் சென்றார். அங்கு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு இளையராஜா சொந்தப் படம் தயாரிக்க திட்டமிட்டு, அதற்கான பணியை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் அப்பணி முழுமை அடையவில்லை. இப்போது ரஜினி சந்தித்துப் பேசியுள்ளதால், புதிய தகவல் கிடைக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுகின்றனர்.