Thursday, November 1, 2007
ss next movie - tamil murasu news
ஆன்மிகத்தில் மூழ்கியுள்ள ரஜினி, அடுத்த படத்தை உடனே தொடங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அவரது நண்பர் வட்டாரம் தெரிவிக்கிறது. அதே நேரம் ரஜினியின் கால்ஷீட் யாருக்கு என்பதில்தான் பெரும் குழப்பம் நீடிக்கிறது. கவிதாலயாவுக்குப் படம் நடித்துக் கொடுங்கள் என்று அவரது குரு கே.பாலசந்தர் கேட்டுள்ளார். தவிர, ரஜினியின் நண்பர் பஞ்சு அருணாசலமும் தனது பி.ஏ ஆர்ட் புரொடக்ஷன்சுக்கு கால்ஷீட் கேட்டுள்ளார். ஏனெனில், அவரது நிறுவனத்துக்கு இது 30-ம் ஆண்டு நிறைவு. அதை பிரமாண்டமாக வெளிப்படுத்த ரஜினி படத்தைத் தயாரித்தால் மட்டுமே முடியும். ஆக, இவ்விரு நிறுவனங்களுக்கு ரஜினி படம் செய்வது உறுதி என்று ஆருடம் சொல்கின்றனர். ஆனால், பொங்கல் பண்டிகைக்குப் பின் ரஜினியின் புதுப்பட அறிவிப்பு வரும் என்று நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. தற்போது இந்தி 'கஜினி'யை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், ஏப்ரல் வரை அந்த ஷ¨ட்டிங்கில் இருப்பதால், அவரது பெயரையும் மனதில் இருத்தி அசைபோட்டு வருகிறாராம் ரஜினி.